Thursday, June 2, 2011

மழலை மந்திரம்

குறை கூறியே வளர்க்கப்படும் குழந்தை
                                        வெறுக்கக் கற்றுக்கொள்கிறது.

அடக்கி வளர்க்கப்படும் குழந்தை
                                        சண்டையிட  கற்றுக்கொள்கிறது.

கேலி செய்யப்படும் குழந்தை
                                        வெட்கத்தோடு வளர்கிறது .

அவமானப் படுத்தப்படும் குழந்தை
                                        குற்றவாளியாய் ஆகின்றது.

சகிப்போடு வளரும் குழந்தை
                                        பொறுமையை கடைப்பிடிக்கின்றது.

ஊக்கு விக்கப்படும் குழந்தை
                                        மனத்திண்மை பெறுகின்றது.

புகழப்படும் குழந்தை - 
                                       பிறரை மெச்சக் கற்றுக்கொள்கிறது.

பாதுகாக்கப்படும் குழந்தை
                                       நம்பிக்கை பெறுகின்றது.

நட்போடு வளரும் குழந்தை 
                                       உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது .