Tuesday, December 28, 2010

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நேற்று என்பது கடந்து போனது

நாளை என்பது கனவில் இருப்பது

இன்று என்பது எதிரே நிற்பது
 
நன்று வாழ்ந்தால் என்றும் நல்லது.

                      - அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tuesday, December 7, 2010

கவிதை

ரோஜாவில் முள் இருக்கிறதே என்று
கவலைப்படாதீர்கள்
முள்ளில் ரோஜா மலர்ந்திருக்கிறதே என
மகிழ்ச்சி அடையுங்கள்

மாற்றம்

மாற்றம் கடினமானது .

ஆனால் மாறாமல் இருப்பது அதைவிட கடினமானது.

Friday, December 3, 2010

விதைகள்

விதைத்தவர்கள் உறங்கிவிடலாம்....

விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை..!!
 

Thursday, December 2, 2010

மூன்று வார்த்தைகள்.........

வெற்றியிலும்,தோல்வியிலும்

நாம் நினைக்க வேண்டியவை

மூன்றே வார்த்தைகள் தான் -

         "இதுவும் கடந்து போகும்"

கடலின் ஒரு துளி.........

நாம் செய்யும் சேவையானது கடலின் ஒரு துளி போன்றது .

ஆனால், நாம் அதை செய்யாவிட்டால்

கடலில் ஒரு துளி குறைந்து விடும் அல்லவா?

                                                                   -  அன்னை தெரசா 

Monday, November 29, 2010

கவிதை

காட்டில் நிலவாய் கடலில் மழையாய்

இருந்தால் யாருக்கு லாபம்?

பகையில் துணையாய் பசியில் உணவாய்

இருந்தால் ஊருக்கு லாபம் !

                                                        -  கவிஞர் வாலி

வாழ்க்கை

இளமையில் கற்கிறோம்

முதுமையில் புரிந்து கொள்கிறோம் .

தன்னம்பிக்கை

                            படி எங்கிருக்கிறது என்று தெரியாத போதும்

                                        முதலடி எடுத்து வைப்பதற்குப்

                                           பெயர்தான் தன்னம்பிக்கை

Saturday, November 27, 2010

நம்பிக்(கை)

 உனக்கு உதவும்  கரங்கள் தேவைப்பட்டால் என்றுமே தயாராக, இரு கைகள் காத்திருக்கின்றன உனது தோள்களின் முடிவில்.

                                                                                            -  பில்கேட்ஸ்

Friday, November 26, 2010

விடுதலை வேங்கையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

விழ விழ எழுவோம்!
ஒருவர் பலியானால் ஒன்பது பேர் புலியாவோம்.

                                       - வேலுப்பிள்ளை பிரபாகரன்

சேவை

சேவையின் மூலமே இறைவனை அடைய முடியும். ஆதலால் சேவையையே என் மதம் ஆக்கிக் கொண்டேன். என் அளவில் சேவை என்றால் அது இந்தியாவுக்குச் செய்யும் சேவையே. 
                                       - மகாத்மா காந்தி, சத்திய சோதனையில்.....  

Thursday, November 25, 2010

அமைதி!

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது.
                                                            
                                                                                                        - பகவத்கீதை

மருத்துவம்......

மெட்ராஸ் ஐ வந்தால்......

கட்டாயம் செய்ய வேண்டியவை:
                       
                          - டிஷ்யூ பேப்பரால் மட்டுமே கண்களைத் துடைக்க வேண்டும்.
                          - துடைத்த டிஷ்யூ பேப்பரைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட வேண்டும். 
                         - சுத்தமான தண்ணிரில் கண்களைக் கழுவி, ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். 
                         - கண்களைத் தொட்டுவிட்டால் வேறு எதையும் தொடாமல் உடனடியாக கையைக் கழுவ வேண்டும்.
                         - டாக்டர் ஆலோசனை அவசியம்.

 தவிர்க்க வேண்டியவை:

                       - கண்களைத் தொடவே கூடாது.
                       - நீங்களாக மருந்து போடக் கூடாது.
                       - வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களிடம் நெருக்கமாக இருக்கக்  கூடாது.

கவிதை......

மறந்து விட்டாயா !  என்று கேட்டாயே....! எப்படி மறப்பேன், சிரிக்கும் இதழ்களை, வதைக்கும் விழிகளை, பிரிவின் வலிகளை, அணைக்கும் கரங்களை, சிதைக்கும் புன்னகையை எப்படியடி மறப்பேன் நான்...!

Wednesday, November 24, 2010

இன்று..........

பல வெற்றியாளர்களைப் பேட்டி கண்ட எழுத்தாளரை, இளைஞர் ஒருவர் பேட்டி கண்டார். 'நீங்கள் அறிந்த வரையில், வெற்றியாளர்களின் பொது அம்சம் என்ன?' . எழுத்தாளர் சொன்ன பதில், 'அவர்கள் அனைவருமே வெற்றிக்குரிய வாழ்க்கைக் சூழலில் இருந்து வந்தவர்கள் அல்ல. ஆனால், ஒரு பொது அம்சம் உண்டு. விருப்பப்பட்ட துறையில் தங்கள் வெற்றி பெறப் போவதை உளமார நம்பினார்கள். ஒரு வெற்றியாளரை  போலவே நடந்து கொண்டார்கள். அவர்களின் அணுகுமுறை என்ன தெரியுமா ? Fake it, till you make it.  ஒன்றை எட்டும் முன்பே எட்டியதாக நம்புங்கள் , நிச்சயம் எட்டுவீர்கள்.'  
              - வெற்றிக்கு முதல் தேவை நம்பிக்கை

Tuesday, November 23, 2010

இன்றைய சிந்தனை

" உன்னால் முடிந்தவரை மிகப்பெரிய மனிதர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்" என்று மகனிடம் சொன்னார் தந்தை. ' அவர்கள் தொடர்பால் நான் நல்ல வாய்ப்புகளைப் பெறுவதற்காக சொல்கிறிர்களா? ' என்றான் மகன். "இல்லை ! அவர்கள் எளிமையாகவும் இனிமையாகவும் பரிவாகவும் உன்னிடம் பழகுவார்கள். அதைப் பார்த்து, அவர்கள் எப்படி பெரிய மனிதர்கள் ஆனார்கள் என்று உன்னால் கற்றுக் கொள்ள முடியும்" என்றார் தந்தை.
                   - தங்கம் அமைதி காக்கும், ஜரிகைத்தாள் படபடக்கும்.

Monday, November 22, 2010

சின்னஞ் சிறு சிந்தனை

ஓர் மனிதனுக்கு , தன் சக்திகள் தெரியாமல் இருந்தன . ஓர் தொழிலதிபரை சந்தித்து கேட்டான் . அவர் சொன்னார், " நீ மூங்கிலா, கரும்பா ? கண்டுபிடி " என்று. " மூங்கிலுக்குள்ளே வெற்றிடம் இருக்கும். அதற்குள் நுழையும் காற்று இசையாகும். கரும்பின் உள்ளே சாறு இருக்கும். கசக்கி எடுக்க வேண்டும். நீ இசையை வெளிபடுத்தும் மூங்கிலாய் இரு. கசக்க வேண்டிய கரும்பாய் இருக்காதே" என்றார் அவர்.
                - உள்வாங்கும் திறன் இருந்தால் தான் உயர முடியும்.

Tuesday, November 16, 2010

கள்வரே கள்வரே

எவ்வளவு அருமையான பாடல்..... அருமையான வரிகள்...இனிய இசை...மயக்கும் குரல்....  http://www.youtube.com/watch?v=ULPPK7UlCmk   
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா
அகமறிவீரோ அருள் புரிவீரோ

வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே
உடை களைவீரோ
உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னாய்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்
அங்கெங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொன்னேனே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்கும் தெரிகின்றதா

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

பாடியவர்: ஸ்ரேயா கோஷால்
படம்: ராவணன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்:வைரமுத்து

Thursday, October 28, 2010

தல போல வருமா .....!!! - சச்சின் டெண்டுல்கார்



Add caption



















































வணக்கம்

வணக்கம்
இது ஒரு சோதனை பதிவு
இனி அடிக்கடி சநதிப்போம்
 
நண்பேண்டா ... ராம்சம்பத்.....